வவுனியா குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகத்தில் திடீர் சோதனை
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தில் அதிகளவிலான மக்கள் நிற்பதாகவும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் இன்று (21.10) திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அதிகளவிலான மக்கள் சுகாதார நடைமுறைகளைப்
பின்பற்றாது நின்றதையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளுக்கு கோவிட்
அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.





அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri