வவுனியா குடிவரவு - குடியகல்வு காரியாலயம் முன் ஐவர் அதிரடியாக கைது
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06.2023) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக்கொடுப்பதற்கு 5000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 30.05.2023 அன்று சந்தேகத்திற்கிடமான முறையில் காரியாலயம் முன்பாக ஒன்று கூடி நின்ற 10 நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
