வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வேறு இடத்திற்கு மாற்றம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா, வெளிச்சுற்று வீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கி வரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும்.
அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.
மீள ஆரம்பிக்கப்படும் சேவைகள்
மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam