இரண்டு மாதத்திற்கு மேல் மின்சார நிலுவை இருந்தால் மின்சாரம் துண்டிப்பு!
வவுனியாவில் இரண்டு மாதத்திற்கு மேல் மின்சாரக்கட்டணம் செலுத்தாவிட்டால் ஒருமணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டு மின்சார துண்டிப்பு மேற்கொள்ள மின்சார சபை உத்தியோகத்தர்கள் இன்று (19.01.2023) நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருமன்காடு, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மின்சார நிலுவைகள் காணப்படும் வீடுகளுக்கு சென்ற மின்சார சபை உத்தியோகத்தர்கள் மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மின்சாரத்துண்டிப்பு
இரண்டு மாதத்திற்கு மேல் தொடர்ந்து மின்சாரப்பட்டியல் நிலுவை செலுத்தாத மின் பாவனையாளர்களிடம் மின்சார நிலுவைகளை ஒரு மணித்தியாலய கால அவகாசத்தில் செலுத்திக்கொள்ளுமாறும் அவ்வாறு செலுத்தத் தவறியவர்களின் வர்த்தக நிலையங்கள் வீடுகளுக்கு மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்கள்.
இதையடுத்து மின்பாவனையாளர்கள் தமது மின்சார நிலுவை கட்டணங்களும் செலுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தற்போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இரண்டு
மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் மின்சார துண்டிப்பு நாடளாவிய ரீதியாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
