கோவிட் சிகிச்சைக்காக 200 கட்டில்களை கொண்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தயார்!
கோவிட் சிகிச்சைக்காக 200 கட்டில்களைக் கொண்டதாக வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கோவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன், 200 கோவிட் நோயாளர்களைத் தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கோவிட் நோயாளர்களை உள்வாங்குவதற்குத் தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.




ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam