5 வருடங்களின் பின் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறக்க நடவடிக்கை(Photos)
வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய
நிலையத்தினை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான்
உள்ளிட்ட குழுவினர் நேற்று(31.05.2023) பார்வையிட்டுள்ளனர்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையமானது 291 மில்லியன் பெறுமதியில் பல இழுபறிகளுக்கு மத்தியில் வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் அமைக்கப்பட்டது.
எனினும் மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கடும் நிபந்தனைகள் மற்றும் அரசாங்கத்தின் மந்த செயற்பாடுகளால் திறக்கப்படாமல் காணப்பட்டது.
பொருளாதார மத்திய நிலையத்தை திறக்க நடவடிக்கை
இந்நிலையில், பல தடவைகள் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்காக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்ட போதும் திறக்கப்படாமல் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்காக பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர், வவுனியா அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |