வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கூட்டம் இன்று (15.02.2024) இடம்பெற்றது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதில், கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை, வனவளத் திணைக்களத்திடம் இருந்து காணி விடுவிப்பு, வீதி புனரமைப்பு, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதில் வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.










10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
