வவுனியாவில் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் உட்பட மேலும் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியான நிலையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருநாவற்குளம், பெரிய கோமரசங்குளம், அவுசலப் பிட்டிய, நெடுங்கேணி பெரியமடு பகுதிகளில் தலா ஒருவரும் ஈரப்பெரியகுளம் பகுதியில் நால்வரும், மதவாச்சி பகுதியில் இருவருக்கும், மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் எரிக்கலம்கள் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.