புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வவுனியா மாவட்ட நிலவரம்(Photos)
புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் 31 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 - 141 புள்ளிகளுக்கிடையே 116 மாணவர்களும், 70 - 99 புள்ளிகளுக்கிடையே 136 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.
புலமைப்பரீட்சைக்கு 140 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் சித்தி விகிதம் 97 விகிதமாக காணப்படுகின்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 73 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 73 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், 100 - 141 புள்ளிகளுக்கிடையே 96 மாணவர்களும், 70 - 99 புள்ளிகளுக்கிடையே 21 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.
அத்துடன் 70புள்ளிகளுக்கு கீழ் எந்தவொரு மாணவரும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரீட்சைக்கு 194 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் அவற்றில் 190 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர். சித்தி விகிதம் 98 விகிதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலை
வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 07 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் 23 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் 28 மாணவர்களும் பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
அத்துடன் 70புள்ளிகளுக்கு கீழ் எந்தவொரு மாணவரும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களிற்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள்,
வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை
பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் முதலாவது இடம்
புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
பாடசாலையில் தரம் 5டீ வகுப்பில் கல்வி பயின்ற இவ் மாணவி பல துறைகளில் சாதனைகளை நிலைநாட்டி வந்த நிலையில், புலமைப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையினை தேடித்தந்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தாருல் உலும் மகா வித்தியாலயம்
வவுனியா தாருல் உலும் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், 100 - 141 புள்ளிகளுக்கிடையே 11 மாணவர்களும், 70 - 99 புள்ளிகளுக்கிடையே 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.
மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். சித்தி விகிதம் 100 விகிதமாக காணப்படுகின்றது.
இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த மாணவர்களை வாழ்த்துவதுடன் இம்மாணவர்களை சிறப்பாக வழி நடத்திய வகுப்பாசிரியைக்கு மனமார்ந்த நன்றிகளையும், இம்மாணவர்களின் வெற்றிக்கு அனைத்து வகையிலும் உதவிய பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
