வவுனியா - செட்டிகுளத்தில் விபத்து - நால்வர் படுகாயம்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை
குறித்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் போது தெரியவந்துள்ளது
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam