வவுனியா - தோணிக்கல் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்
வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று வீட்டிலிருந்த தளபாடங்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டாரையும் அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தோணிக்கல், பொதுக்கிணறு வீதிக்கு அருகிலுள்ள பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த கதிரை, மேசைகள் உள்ளிட்ட வீட்டுத் தளபாடங்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவினையும் உடைக்க முயன்றுள்ளனர்.
வெளியில் சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்த போது குறித்த இளைஞர் குழு வீட்டில் நின்றுள்ளதுடன், வீட்டு உரிமையாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.