இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்
கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரை கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் ஒக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக ராகமை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள முதியவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
காணாமல்போயுள்ள முதியவரின் விபரங்கள் பின்வருமாறு ; பெயர் - ரன்ஜித் பெர்ணான்டோ வயது - 82 முகவரி - இல. 222, ராகமை தேசிய அடையாள அட்டை இலக்கம் - 432570533v அங்க அடையாளங்கள் - 5.5 அடி உயரம் என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் உள்ள தந்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 071 853 2532 அல்லது 077 444 8418 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




