வவுனியாவில் சிறைச்சாலை உத்தியோத்தர்கள் இருவர் உட்பட 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் இருவர் உட்பட 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (21.05) இரவு வெளியாகின.
அதில், தாதியர் விடுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறைச்சாலை உத்தியோகஸ்தர் இருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாகச்சகொடி பகுதியில் ஒருவருக்கும் என 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும்
சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.