வவுனியா மின்சார சபையின் அலட்சிய போக்கு- அச்சத்தில் மக்கள்
வவுனியா சிறீராமபுரம் கிராமத்தில் மின்விநியோகம் தொடர்பான நடவடிக்கையை மின்சாரசபை எடுக்க தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மின்சார கம்பிகள் மேல் மரக் கிளைகள் சரிந்து வீழுந்துள்ளதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மின்சாரசபை அலுவலகத்திற்கு முறைப்பாடளித்தும் மின்சார சபை அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கவனயீன செயற்பாடு
இதனால் பிரதேசவாசிகள் தமது மின் உபகரணங்களை உபயோகிக்காது அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
இதுமட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டிருந்த வேளையும்
மின்சாரசபை அதிகாரிகள் கவனயீனமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
