நாட்டின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பால் சுகாதார சேவைகள் முடக்கம்: நோயாளர்கள் அவதி (Video)
நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு இன்று (08.02.2023) காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை (09.02.2023) 8 மணி வரையான 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (08.02.2023) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதனையடுத்து, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.
நோயாளிகள் அசௌகரியம்
இந்நிலையிலேயே கிளிநொச்சி, வவுனியா, மத்திய மலைநாடு மற்றும் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலுளள பொது வைத்தியசாலையில் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சேவைகள் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
















உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
