வவுணதீவு இரட்டைக் கொலை: புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியம் கொலை செய்த சம்பவம் தொடர்பில் அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை(21) சிஜடியினர் கொழும்பில் வைத்து கைது செய்தனர்.
கடந்த 2018 நவம்பர் 29ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன் நிரோசன் இந்திரபிரசன்னா, மற்றும் பொலிஸ் கன்ஸ்டபல் டினேஸ் ஆகியோரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைத் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றனர்.
நான்காம் மாடி
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன் தீவு பகுதியைச் சேர்ந்த அஜந்தன் என்பவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள சிஜடி நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டார்.
இதனையடுத்து, உயித்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் குழுவினரே இந்தத் தாக்குதலை செய்யததாக உறுதிப்படுத்தி கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது பழி சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
