189 மில்லியன் ரூபா செலவில் பெரியகட்டு அந்தோனியார் ஆலய வீதி அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு
வவுனியா - செட்டிகுளம் பெரியகட்டு அந்தோனியார் ஆலயத்தின் வீதி புனரமைப்பு பணிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் ஆண்டகை முன்னிலையில் குறித்த பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன், சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தினை 189 மில்லியன் ரூபா பெறுமதியில் மேற்கொள்ளவுள்ளனர்.
பெரியகட்டு அந்தோனியார் ஆலயத்தினை சூழ வீதி அமைக்கப்படவுள்ளதுடன் ,அந்தோனியார் ஆலயத்தினூடாக பெரியகட்டு கிராமம் வரையான பிரதான வீதியும் இதன்போது அமைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் ஆண்டகை, அந்தோனியார் ஆலயத்தின் பங்கு தந்தை அருள்நேசன், செட்டிகுளம் பிரதேசசபை தலைவர் ஜெகதீஸ்வரன், கிராம சேவகர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri