வவுனியாவில் பேருந்துகளில் அதிகளவான பயணிகளை ஏற்றிச்செல்வதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பேணாமல் அதிகமான பயணிகள் பேருந்துகளில் ஏற்றப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது கல்வித்துறைசார்ந்து உத்தியோகத்தரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக பேருந்துகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவதுடன், எந்தவித சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. அதனை கண்காணிப்பதற்கும் சரியான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
எனவே பொலிஸார் ஊடாக பேருந்துகளை கண்காணிப்பதற்கு ஒரு திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும். குறித்த செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுப்போக்குவரத்து சேவைகளில் பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு
பயணிகளை ஏற்றுவது தொடர்பாக பேருந்து தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்று
அரசஅதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.