யாழ்.இளைஞன் மரணம்: சாட்சியம் வழங்க நீதிமன்றம் அழைப்பாணை
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் சாட்சியம் வழங்க யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நாளை (24.11.2023) வெள்ளிக்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சாட்சியம்
வட்டுக்கோட்டை பொலிஸாரால் சந்தேகநபராக கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பொலிஸாரால் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கவே இருவரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |