காசா போரின் எதிரொலி : ஹிஸ்புல்லா அமைப்புக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஹிஸ்புல்லா அமைப்பினா் அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கிமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கிலுள்ள 2 ஹமாஸ் நிலைகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
காசா போரின் எதிரொலியாக, மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினா் அமெரிக்க இராணுவ நிலையங்கள் மீது முதல்முறையாக குறுகிய தொலைவு ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
இதற்குப் பதிலடியாக, அல் அன்பாா் மற்றும் ஜுா்ஃப் அல் சாக்கா் பகுதிகளுக்கு அருகே உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் செயல்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலையங்கள் மீது கடந்த மாதம் 17-ஆம் திகதியிலிருந்து இதுவரை 66 முறை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |