பரதநாட்டியத்தை அவதூறு செய்த மௌலவி: மன்னிப்புக் கோரிய ஜம்இய்யத்துல் உலமா சபை(Video)
அண்மையில் எமது சகோதர சமயம் சார்ந்த ஓர் குருவானவரின் இணையவழி பகிர்வுகள் எமது இந்து மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது என ஜம்இய்யத்துல் உலமா சபை மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 09.11.2023 ஆம் திகதி முஸ்லீம் மௌலவி ஒருவரால் பரதநாட்டியம் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இது தொடர்பாக அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு ஜம்இய்யதுல் உலமா தலைமைக் காரியாலத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், இது தொடர்பாக இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் எமது கவலையையும் இது தொடர்பிலான கண்டனத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
போதகர் மீது நடவடிக்கை
மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் கூறியுள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்தும் இவைபோல் இடம்பெறா வண்ணம் பார்ப்பதாகவும், மேற்படி போகதர் மீது தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |