சித்திரவதை கூடமாக காணப்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்: சுகாஷ் வெளியிட்ட தகவல்(Photos)
சித்தங்கேணி இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டு விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் சென்றிருந்தனர்.
இதன்போது சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்களுடன் சென்றிருந்த நிலையில், அவர் இன்று(29.11.2023) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாட்சியின் பாதுகாப்பு
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"நேற்றைய தினம் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைவாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அலெக்ஸ் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், தடுத்துவைக்கப்பட்டதாகவும் கூறப்படும் இடங்களைச் சாட்சி காண்பித்தார்.

சாட்சியின் பாதுகாப்பிற்காக நீதிமன்ற அனுமதியோடு நானும் சென்றிருந்தேன். அங்கு அவதானித்தவற்றின் அடிப்படையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சட்ட அடிப்படையிலான நிலையமாக அன்றி ஓர் சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.
நீதிமன்ற விசாரணைகள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக ஏனைய விடயங்களை வெளிப்படுத்துவதை இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்கின்றேன்”என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam