வட்டுக்கோட்டை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி சேவைகள் ஆரம்பம்
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன.
குறித்த வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது பல ஆண்டு காலமாக இயங்காமல் காணப்பட்டது.
வைத்தியர் அதிகாரி
இந்நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி செந்தூரன் அவர்களது முயற்சி காரணமாக இந்த விடுதியானது மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பொறுப்பு வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்
பி.ஜி.மஹிபால, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.பத்திரன,
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,
பதவி நிலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரிச்
சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும்
கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri