யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று(17) இடம்பெற்றுள்ளது.
முகநூல் நேரலை
இதன்போது, கூட்டத்தில் அநாமதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.
இதனையடுத்து, முகநூல் நேரலை செய்யவேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து தொடர்ந்து அமர்ந்துள்ளார்.
இதன்போது, கூட்டநிறைவில் அங்கு சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே, கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடிய பிரதம செயலக அலுவலகத்தில் சென்று முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாவகச்சேரி பொலிஸார் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்ற
கலந்துரையாடலில் அநாமதேயமாக குறித்த நபர்பங்கேற்றமை சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளதுடன் அழையா விருந்தாளியாக பங்கேற்ற சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய
அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் முகநூல் நேரலை செய்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(17.07.2024) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளித்த போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சரின் விஜயம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விடுதிகள் மற்றும் சத்திரசிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்துள்ளார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும்Dr.அசேல குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











கிளீன் தையிட்டி..! 1 நாள் முன்

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam

அட்டகாசமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வளைகாப்பு... நேரில் சென்ற நடிகர்கள் Cineulagam

ட்ரம்பால் எழுந்த பீதி... பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் லண்டனில் இருந்து வெளியேற்றம் News Lankasri

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri
