வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் மஞ்சத்தில் வரும் நிகழ்வு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் மஞ்சத்தில் வரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, பங்குனி மாத இறுதி திங்களான நேற்று (08.04.2024) நடைபெற்றுள்ளது.
கடந்த மூன்று பங்குனி திங்கட்கிழமைகளில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளது.
அருள் பாலித்த அம்மன்
இந்நிலையில், பங்குனி மாதத்தின் இறுதி திங்களான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்வீதி வலம் வந்து வெளியில் வந்த அம்மன் மஞ்சத்தில் அமர்ந்து வெளிவீதி வந்து மக்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
இதன்போது, பெருமளவான பக்த்தர்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் ஒன்றுகூடி தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்துள்ளதுடன் அம்மன், மஞ்சத்தில் அமர்ந்து வீதி உலா வரும் காட்சியனையும் தரிசித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |