உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினாலுக்கு ஆதரவளிக்க வத்திக்கான் உறுதி
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Francis) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வத்திக்கானில் இருந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்,கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் ,அது தொடர்பாக தாம் பிரதிப்பளிப்பதாகவும் ,கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் இலங்கை பிரஜைகள் பங்குபற்றிய இணையதள சந்திப்பின் போது இக்கடிதம் தொடர்பாக பேராயர் விளக்கமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி கர்தினால்
விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் வத்திக்கானில்
இருந்து அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
