வெற் வரி திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்
வெற் வரி திருத்தச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) இன்று (23.06.2026) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
வெற் வரி (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), விசேட வர்த்தகப் பண்டங்கள் வரிச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு கட்டளைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட “இணையவழி முறைகளின் பாதுகாப்புச் (இரத்துச் செய்தல்) சட்டமூலம்” எனும் தனிநபர் சட்டமூலம், ய பிற்பகல் 5.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீட்டிற்காக பரிசீலிக்கப்பட்டு, சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது விவாதம் எதுவும் நடைபெறாது. அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையிலான பிரேரணை பிற்பகல் 5.00 மணி முதல் பிற்பகல் 5.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி ஹன்ச அபேரத்ன தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மாஸ்டர் பிளான்!அரசாங்கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள்
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri