வட் வரி அதிகரிப்பு : வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயம்
அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் (VAT) வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 சதவீதம் வரை இவ்வாறு வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச வருமானம் அதிகரிப்பு
இதன்படி, உடல்நலம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுகள் தொடர்பான தயாரிப்புகளைத் தவிர மற்ற அனைத்து பொருள் மற்றும் சேவைகளுக்கான VAT வரிவிலக்குகளும் நீக்கப்படும்.
பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க 55 பில்லியன் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இடம்பெற்று வரும் வரி ஏய்ப்புக்கள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும்.
அரசாங்க வருமானம் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் அதிக வரிச் சலுகைகளை வழங்குவதற்கு இடமுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
