வட் வரி அதிகரிப்பால் மின் கட்டணத்தில் பாதிப்பா..! சபையில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் அது மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிதாக வட் வரி
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, இதுவரை வட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு புதிதாக வட் வரி அறவிடப் போகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன், “உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும். வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப் போகின்றனர். தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப் போகின்றனர்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மின் கட்டணம் உள்ளிட்ட துறைகள்
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதம் வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் மின்சார கட்டணம் உட்பட பல துறைகளில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |