நாட்டில் வரி செலுத்த வேண்டிய நபர்கள் : நிதி அமைச்சு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு
தற்போது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவான்வெல்ல பிரதேசத்தில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்த வேண்டியவர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது.
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, தேசிய வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படவில்லை.
வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல.
தற்போது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
