மேலும் சில பொருட்களுக்கு வற் வரியை அறவிட தீர்மானம்
குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு வற் வரியை அறவிடுவதற்கு நிதி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரமான வைத்தியர், ஹர்ஷ டி சில்வா இன்று (06.12.2023) நாடாளுமன்றத்தில் இதனை சுட்டிக்காட்டியள்ளார்.
எவ்வாறாயினும், அந்த அத்தியாவசிய பொருட்களுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு தனது குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டீசலுக்கும் வற் வரி
"ஏராளமான விவசாயிகள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. மிகச் சிலரே வற் வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு வரி வருவாய் இன்றியமையாதது என்று அரசு கூறுகிறது.
ஆனால் வரி விதிப்பில் நியாயம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். இப்போது டீசலுக்கும் வற் வரி விதிக்கப்பட்டுள்ளது." என ஹர்ஷ டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
