பதவியை ராஜினாமா செய்வது குறித்து வாசுதேவ விளக்கம்
அமைச்சுப் பதவியை எப்போது ராஜினாமா செய்வது என்பது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விளக்கம் அளித்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் அந்த நொடியே தாம் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் முனைப்புக்களில் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்து கொண்டால், கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதியை மிதக்கச் செய்தல், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாமை உள்ளிட்டன சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் உடனடியாக தாம் பதவி விலகுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri