அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றமாட்டேன்! - வாசுதேவ நாணயக்கார
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்பதாக தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது இராஜினாமா கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நிமிடமே ஆகும் எனவும் தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக தாம் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்த அவர், தான் அமைச்சர் பதவியில் இருக்கு வரை நீர் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.





பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri
