மொத்த வியாபாரத்தில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் - வாசுதேவ நாணயக்கார
மொத்த வியாபாரத்தில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென நீர் விநியோக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மோசடிகளில் ஈடுபடும் வர்த்தகர்களின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில், சில வர்த்தகர்கள் தாங்கள் விரும்பியவாறு பொருட்களின் விலைகளை நிர்ணயித்து விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முடக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த வியாபாரப் பொறிமுறையை உரிய முறையில் ஒழுங்குபடுத்தினால் நுகர்வோருக்கு நலன்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.