நிலக்கரி விவகாரம் குறித்த கணக்காய்வாளர் அறிக்கை தவறானது - அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளை நிராகரித்துள்ள அமைச்சர் வசந்த சமரசிங்க அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் இந்த அறிக்கை மோசடி குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. சாத்தியமான சந்தர்ப்பங்களை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அருட்தந்தை சிறில் காமினி:சுரேஷ் சலேவிடம் இருக்கும் ஆதாரங்கள்!
முரண்பாடான பகுதிகள்
கொள்முதல் நடவடிக்கையில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த நடைமுறையில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை என்பதையே நானும் எமது அமைச்சர்களும் கூறுகிறோம்.
இத்தகைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமற்றது. கொள்முதல் நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படின் கணக்காய்வாளர் நாயகம் அவற்றை தெளிவாக அடையாளம் கண்டிருக்க வேண்டும்.

அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் வைப்புத்தொகை மற்றும் ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை விவரித்து பேசினார்.
முழுமையான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தவறானது என்று தான் கூறவில்லை. ஆனால் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்கள் மற்றும் பகுதிகள் தவறானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam