புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு: வவுனியாவில் பல்வேறு சேவைகள் முடங்கின...! (Photos)
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியாக இன்றைய தினம் இடம்பெற்றுவரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வரித்திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு கோரியும் தொழிற்சங்க கட்டமைப்புக்களால் நாடளாவிய ரீதியில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளிற்காகச் சென்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவின் பிரதான வங்கிகளின் செயற்பாடுகளும் இன்றையதினம் தடைப்பட்டிருந்தது.
இதனால் தூர
இடங்களிலிருந்து வங்கிச்சேவைகளுக்காக வருகைதந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பிச் சென்றிருந்தமையை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.











இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாகிஸ்தான்! பிரித்தானியாவில் முக்கிய அதிகாரிகளை சந்தித்த குழு News Lankasri

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
