நாட்டின் சிறுவர்-குழந்தைகளுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் ஏற்படுவது இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள்
எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகள் மற்றும் பானங்களை குடிப்பதற்கு கொடுக்க வேண்டும்.
வறண்ட காலநிலையுடன் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் சிறுவர்களிடையே பரவக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையை நாடுமாறும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணத்தில் வெப்பமான காலநிலை நிலவுவதால் சிறுவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
கிருமித் தொற்றுகள்
மேலும், குறித்த காலப் பகுதியில் குழந்தைகள் சிறுவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படுபதுடன் உடலில் பருக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இவ்வாறு பருக்கள் ஏற்படும் போது உடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் பெற்றோர்கள் சிறுவர்கள் குழந்தைகளின் உடல் சுத்தத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
