இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமான நீர் மூழ்கி கப்பல் - இப்படிக்கு உலகம்
44 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய தயாரிப்பான இந்த நீர் மூழ்கிக் கப்பலுக்கு கே ஆர் ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு பெயரிட்டிருந்தது.
நேற்று பாலி தீவுகளுக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து எந்த சமிக்ஞையும் பெறப்படவில்லை.
இதையடுத்து காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலைத் தேட இராணுவம், கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்குச் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளிடமும் உதவி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான அந்த நீர் மூழ்கிக் கப்பலில் 53 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
