பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி எனக்கு இல்லை!தேரர் வெளியிட்ட தகவல்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி தனக்கு இல்லை என அபயராமை விகாரையின் விகாராதிபதி, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேரர்,, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உண்மையில் அதற்கான தகுதியில்லை. எனினும் தகுதி ஒன்று இருப்பதாக கருதியே ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
வெறுமனே இந்த நியமனம் இடம்பெறவில்லையே. தகுதி இருப்பதால் தானே இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஆகவே இதுத் தொடர்பில் என்னிடமல்ல. ஜனாதிபதியிடமே கேற்க வேண்டும்.
கேள்வி: உங்களுக்கு இருக்கும் தகுதி என்னவென நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்:தகுதி என நீங்கள் எதனை கருதுகின்றீர்கள் என பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் தனது நியமனம் அமுலுக்கு வரும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்திருந்தார்.
எனினும் மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் தலைமைப் பதவிக்கு தகுதியில்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri