விமான நிலையத்தில் இருந்து சென்றவர்களுக்கு வீதியில் காத்திருந்த அதிர்ச்சி
கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
கல்ஓயா ஹபறன வீதியில் நேற்று இரவு (27-12-2025) பயணித்த வான் ஒன்றே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
யானையின் தாக்குதல்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியாவை நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் யானைக் குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அருகிலிருந்த ஏனைய பெரிய யானைகள் அவ்விடத்திற்கு விரைந்து, ஆக்ரோஷமடைந்த நிலையில் பயணிகள் இருந்த வானைத் தாக்கி கடுமையாக சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் உடனடியாக ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்(காணொளி) - யூசுப்