கொட்டாவ பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வான்
கொட்டாவை - மஹரகம வீதியில் இன்று (26) வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வானில் 3 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸார் விசாரணை
பொரளையில் இருந்து கொட்டாவ நோக்கி 174 பேருந்து பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
