கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய வானும் மோட்டார்சைக்கிளும் தீக்கிரை- ஐவர் படுகாயம்
கிளிநொச்சி(Kilinochchi), பூநகரி பகுதியில் ஹயஸ் வானும் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது.
கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ் வாகனம் பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த தாயும் மகளும் வீதியை கடக்கமுற்பட்ட போது அந்த விபத்தை தவிர்ப்பதற்கு ஹயஸ்வாகனத்தை வீதியின் மற்ற திசைக்கு திருப்பிய போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்தவிபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹயஸ் வானும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வான் இரண்டும் தீக்கிரையாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்- தேவந்தன்






விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
