வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் - 8 பேர் காயம்
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.
வானின் சாரதி தூங்கியதால்
விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வானின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |