காலி கோட்டையில் காணி மற்றும் கட்டடங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
காலி கோட்டைப் பகுதியில் ஒரு பேர்ச் காணியின் விலை 22 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காலி மரபுரிமைகள் அமைப்பினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகள்
காலி கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களை வெளிநாட்டுப் பிரஜைகள் கொள்வனவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதி காணி மற்றும் கட்டடங்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன.
காலி கோட்டைப் பகுதியில் வாழ்ந்து வந்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் காணி, கட்டடம் விற்பனை
சில காணிகள் மற்றும் கட்டடங்கள் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதனால் வெளிநாட்டுப் பிரஜைகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலி கோட்டைப் பகுதி காணி விலை அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்களின் வருகையும் குறைந்துள்ளதாக காலி மரபுரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
