ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போயுள்ள பெறுமதியான பித்தளை பொருட்கள்! கையும் களவுமாக சிக்கிய மூவர்
ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதிமிக்க பித்தளை உருளைகளைத் திருடிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜன்னல் திரைச்சீலைகளை தொங்கவிட பயன்படுத்தப்பட்ட 40 பித்தளை உருளைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
வெலிக்கடை பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிய சந்தேகநபர்கள்
சந்தேகநபர்கள் நேற்று (24) பிற்பகல் குறித்த பொருட்களை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றுக்கு விற்பனை செய்யச் சென்ற போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து இந்த பித்தளைப் உருளைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் மூவரும் ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என வெலிக்கடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.