உலக வங்கியின் உப தலைவரின் மனைவி இலங்கையில் தவறவிட்ட பெறுமதியான பொருள்: பெண் ஊழியர் செய்த காரியம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன சேவை பகுதியில் விழுந்து கிடந்த வைரம் மற்றும் முத்து பதித்த வளையல் ஒன்றின் பகுதியை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் கண்டெடுத்து, அதனை உரிமையாளரிடம் வழங்கிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.
இந்த வைரம் மற்றும் முத்து பதித்த வளையலின் பகுதி உலக வங்கியின் உப தலைவரின் மனைவிக்கு சொந்தமானது என தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பகுதியின் உதவி பொறியியலாளர் சிதத் பண்டார ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக் கிழமை ஆயிரத்து 500 வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடும் வைபவத்தில் கலந்துக்கொள்வதற்காக உலக வங்கியின் உப தலைவரும், அவரது மனைவியும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்துள்ளனர்.
வெலிபென்ன பகுதிக்குள் சென்ற இவர்கள் அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள சிதத் பண்டார ஏக்கநாயக்க, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன சேவை பகுதிக்குரிய நிறுவனத்தில் பணிப்புரியும் பெண் ஊழியர் ஒருவர் வீதியில் விழுந்து கிடந்த ஏதோ ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
அது குறித்து பெரிதாக பொருட்படுத்த அந்த ஊழியர் அதனை தனது அலுவலக மேசை பெட்டிக்குள் வைத்துள்ளார்.
இந்த நிலையில், திறப்பு விழா பணிகள் முடிந்து கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த உலக வங்கியின் உப தலைவர் உள்ளிட்டோர், காணாமல் போன வைரம் மற்றும் முத்து பதித்த வளையல் பகுதி பற்றி வெலிபென்ன அலுவலகத்தில் விசாரித்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, அந்த பெண் ஊழியர் தனது மேசை பெட்டியில் பொருள் ஒன்றை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
அதனை பரிசோதித்த போது அது உலக வங்கியின் உப தலைவரின் மனைவி தவறவிட்ட வைரம் மற்றும் முத்து பதித்த வளையல் பகுதி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அது தவறவிட்ட உலக வங்கியின் உப தலைவரின் மனைவியின் வளையலின் பகுதி என்பது உறுதியாகியுள்ளதுடன் அவர்களின் பிரதிநிதி ஒருவர் அலுவலகத்திற்கு சென்று அதனை பெற்றுக்கொண்டதாக பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
