வட கொரிய ஜனாதிபதிக்கு புடின் வழங்கிய பெறுமதியான பரிசு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உள்நாட்டு தாயாரிப்பு கார் ஒன்றினை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த காரினை புடின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு பரிசளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா.வின் தீர்மானம்
மேலும், புடினின் அளித்த பரிசினை கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஏற்றுக் கொண்டதாகவும் இது தொடர்பில் புடினுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பரிசாக வழங்கப்பட்ட கார் எவ்வாறு வடகொரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பன தகவல்கள் வெளிவரவில்லை.
அதேவேளை, வடகொரியாவுக்கு ஆடம்பரப் பொருட்களை வழங்குவதைத் தடை செய்யும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு இது எதிரானது எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், புடின் அளித்த பரிசு இருநாடுகளின் தலைவர்களுக்கிடையேயான தனிப்பட்ட உறவைக் காட்டுவதாக அமைகிறதென அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |