மக்களைக் காப்பாற்றிய ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் - வஜிர அபேவர்தன
இலங்கை மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரை தேசிய சொத்தாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம், உணவு நெருக்கடி, எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
போராட்டங்களுக்கு தீர்வுகண்ட ஜனாதிபதி
விவசாயிகள் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டிக்க ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது காலத்திலேயே அனைத்துப் போராட்டங்களுக்கும் தீர்வு கண்டுள்ளார்.
எனவே, அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின்
மக்கள் அவரை தேசிய சொத்தாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
