வரவு செலவுத்திட்டத்தின் இரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ள வஜிர அபேவர்தன
வறிய மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை வரித் திருத்தங்களுடன் கூடிய மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இம்முறை சமர்ப்பிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் 76வது ஆண்டு விழா தொடர்பாக காலியில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு ஒரு வாய் சோற்றை வழங்கவே ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வருகிறார்
வீதிகள், கட்டடங்களை நிர்மாணிக்க இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படவில்லை. சாப்பிடவும் உடுத்தவும் இல்லாது இருக்கும் மக்களுக்கு ஒரு வாய் சோறு மற்றும் ஆடைகளை அணிவதற்கான முறையை அறிமுகப்படுத்தவே வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி கொண்டு வருகிறார்.
போஷாக்கு இல்லாத சிறார் பரம்பரை உருவாகி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக ஜனாதிபதி வரித்திருத்தங்களுடன் மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வருகிறார்.
இதன் மூலம் கஷ்டப்படும் பிள்ளைகளின் வயிற்று பசியை போக்க எதிர்பார்த்துள்ளோம். கடந்த அரசாங்கத்தில் நடந்த தவறுகளை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி பதவி கனவில் இருப்போருக்கு மக்களை வாழ வைக்கும் திட்டம் இருக்க வேண்டும்
எவருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் தொடர்பில் கனவுகள் இருக்கலாம்.அவர்களுக்கு இரண்டு கோடிய 20 லட்சம் மக்களை வாழ வைக்கும் திட்டம் இருக்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.