முழு ஆசியாவின் காவலனே ரணில் - வஜிர அபேவர்தன பெருமிதம்
"ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில், இலங்கையின் ஜனாதிபதியாகச் செயற்படுவது முழு ஆசியாவுக்கும் விசேட பாதுகாப்பு" என நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜப்பானில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது இது தொடர்பான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவித்தார். ஜனாதிபதியிடம் தெளிவான வெளிவிவகாரக் கொள்கை உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
நம்பிக்கையின் உறுதிப்பாடு
மேலும், இலங்கை மீதான ஜப்பானின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, ஜப்பான் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இலங்கை தொடர்பில் ஜப்பானில் நிலவும் அவநம்பிக்கை மற்றும் சந்தேகங்களை நீக்குவதற்கும் தெளிவற்ற சூழ்நிலைகளைக் தெளிவுப்படுத்தவும் ஜனாதிபதியின் விஜயம் உதவியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
You may like this





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
